1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
2026 பொப்பி மலர் தின விழா பிரதமரின் பங்கேற்புடன்
2026ஆம் ஆண்டுக்கான பொப்பி மலர் தின விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் நவம்பர் 08ஆம் திகதி கொழும்பு விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள படைவீரர் நினைவுச் சின்னத்திற்கு முன்பாக நடைபெற்றது.
முதன்மை அறிக்கை
சுருக்கம்
விழா நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்த பிரதமருக்குப் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. பின்னர், விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள, முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் உயிர்நீத்த படைவீரர்களை நினைவுகூரும் நினைவுச் சின்னத்திற்குப் பிரதமர் உள்ளிட்ட அதிதிகள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.
