1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
யாழில் தொடரும் மழை - திடீரென வீசிய சூழல்காற்று - வீடுகள் சேதம்
யாழில் கடந்த சில நாட்களாக மழையுடனான காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் யாழ் .ஆழியவளையில் நேற்று பிற்பகல் 4 மணியளவில் திடீரென ஏற்பட்ட குறித்த மினி சுழல் காற்று சூறாவளி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுருக்கம்
ஆழியவளையில் நேற்று பிற்பகல் 4 மணியளவில் திடீரென ஏற்பட்ட குறித்த மினி சுழல் காற்று சூறாவளி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு ஆழியவளை அருனோதயா விளையாட்டுக் கழகத்திற்கு அருகாமையிலுள்ள தையல் நிலையம் ஒன்று இரண்டு வீடுகள் என்பன இன்று பிற்பகல் திடீரென வீசிய சுழல் காற்றினால் முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன் இரண்டு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
