1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: ஜெனீவாவில் முறையிட நடவடிக்கை!
சபாநாயகருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மறுப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுருக்கம்
இதனால் குறித்த விடயம் தொடர்பாக ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியங்களிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இதற்கான தேவையான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
