1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
மட்டக்களப்பில் பரபரப்பு : வெளிநாட்டில் மனைவிக்கு சித்திரவதை : குழந்தைகளுடன் வாவியில் குதிக்க முயன்ற தந்தை
மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் இருந்து இரண்டு குழந்தைகளுடன் வாவியில் குதித்து உயிர்மாய்ப்பு செய்து கொள்ள முயற்சித்த தந்தை வாவியில் குதித்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.
சுருக்கம்
குழந்தைகளும் காப்பாற்றப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளதையடுத்து குறித்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த ஒருவர் கண்டு உடனடியாக செயல்பட்டு குழந்தைகளை பறித்து எடுத்துக் கொண்ட நிலையில் தந்தை வாவியில் குதித்ததையடுத்து அங்கு மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் உடனடியாக செயல்பட்டு அவரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
