1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சதித்திட்டத்தை தோற்கடிக்க உயிரையும் பொருட்படுத்தாது செயற்படுவேன்
அநுராதபுரத்தில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது, ஜனாதிபதியின் பாரியார் தன்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்ததாக ராஜாங்கனை சத்தாரதன தேரர் தெரிவித்துள்ளார்.
சுருக்கம்
தாக்குதலுக்குப் பின்னர் தலையில் கட்டுகளுடன் சமூக ஊடகத்தின் ஊடாக வெளியிட்ட விசேட காணொளி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது ஜனாதிபதியின் பாரியாருக்கு மேலதிகமாக, அமைச்சர் வசந்த சமரசிங்க, நாமல் கருணாரத்ன, வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் பல பொலிஸ் அதிகாரிகளும் தன்னைப் பற்றி விசாரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
