அறிவிப்பு: LakFeed தமிழ்ப் பதிப்பு 2026 டிசம்பர் 31 முதல் நிறுத்தப்படும்.

எங்களிடம் தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை; தமிழ் ஆசிரியர் ஒருவரை நியமிக்கப் போதிய நிதியும் தற்போது இல்லை.

மேலும் படிக்க / Read in English

LakFeed ஒரு சிறிய சுயாதீனத் திட்டம். இங்கு வெளியாகும் உள்ளடக்கத்தின் தரத்தைச் சரிபார்க்க யாரும் இல்லாமல் இந்தப் பதிப்பைத் தொடர்ந்து நடத்துவது சரியல்ல என்று கருதுகிறோம். அந்தத் தேதிக்குப் பிறகு தமிழ்ப் பக்கங்கள் கிடைக்காது. செய்திகள், நாணய மாற்று விகிதங்கள், தங்க விலை உள்ளிட்ட சேவைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தொடர்ந்து கிடைக்கும். ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும். இதுவரை எங்களுடன் இருந்தமைக்கு நன்றி.

LakFeed's Tamil edition closes on 31 December 2026. LakFeed is a small independent project. Nobody here reads Tamil, and we cannot currently afford to hire a Tamil editor. With no one able to check what appears here, we do not think it is right to keep this edition running. After that date the Tamil pages will no longer be available. News, exchange rates, gold prices and the rest of the site stay available in English and Sinhala. We are sorry for the inconvenience, and thank you for reading.

Englishසිංහල

உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்Colombo share prices, indices and companies
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
சலுகைகருவிகள்
ஆராயுங்கள்
விக்கிசெய்திகளில் வரும் நபர்கள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள்
  • அனைத்துப் பக்கங்கள்
  • நபர்கள்
  • நிறுவனங்கள்
  • இடங்கள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

  • முதல் பக்கம்
  • பிரபலமானவை
  • சமீபத்திய
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்
ஆதாரங்கள்ஆதாரங்கள்

செய்தி ஆதாரங்கள் (14)

Asian MirrorCitizen NewsFact Crescendo தமிழ்Global Tamil NewsHiru News - TamilIBC TamilLanka News Web தமிழ்Lanka TruthNews First - தமிழ்News.lkTamil MirrorThePapare TamilThinakaranஅத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • விக்கி
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. வணிகம்

1 ஊடகம்·16 ஜன., 2026 புதுப்பிக்கப்பட்டது

சொந்த இடத்தில் அழகான வாழ்க்கை வீடமைப்பு திட்டம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.சொந்த இடத்தில் ஒரு அழகான வாழ்க்கை என்னும் தொனிப்பொருளில் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள் குடிமர்த்துவதற்கான தேசிய வீடமைப்பு வேலைத்திட்டம் யாழ்ப்பாணம், சாவகச்சேரி மீசாலை ஆரம்ப பாடசாலை மைதானத்தில் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றது.ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் டொக்டர் எஸ்.எம் சுசில் ரணசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்த வேலைத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டிற்குள் நாடாளவிய ரீதியில் 31,218 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 05 அமைச்சுக்கள் மற்றும் 09 மாகாண சபைகளினூடாக இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 2026 ஆம் ஆண்டில் சாதகமான முறையில் இந்த வேலைத்திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் டொக்டர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மூன்று தசாப்தங்களாக நிலவிய சிக்கலான சூழ்நிலையினால் இடம்பெயர்ந்து வீடுகளை இழந்த 2,500 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக 2026 ஆம் வருடத்திற்காக 5000 மில்லியன் ரூபா வீடமைப்பு, நிர்மாணிப்பு, நீர் வழங்கல் அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளினாலேயே வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் தேவையான தொழில்நுட்ப உதவிகள் பிரதேச செயலகங்களின் தொழிநுட்ப அதிகாரிகளின் ஊடாக வழங்கப்படவுள்ளன. வீடமைப்பு திட்டத்தில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையை, மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளைக் கருத்திற் கொண்டு 02 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 795 வீடுகளையும் கிளிநொச்சி மாவட்டத்தில் 153 வீடுகளையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 36 வீடுகளையும் மன்னார் மாவட்டத்தில் 79 வீடுகளையும் திருகோணமலை மாவட்டத்தில் 480 வீடுகளையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 387 வீடுகளையும் வவுனியா மாவட்டத்தில் 324 வீடுகளையும் அம்பாறை மாவட்டத்தில் 246 வீடுகளையுமாக மொத்தமாக 2500 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் 2,500 வீடுகளை நிர்மாணித்து நிறைவு செய்ததன் பின்னர் எஞ்சிய வீடமைப்பு தேவையை 2027 முதல் 2029 வரையான 3 வருட காலப்பகுதிக்குள் நிர்மாணிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனிடையே, யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை J 318 கிராம சேவையாளர் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டிற்கான அடிக்கல்லை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று காலை நாட்டினார்.யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களின் வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதன்போது குறிப்பிட்டார். அனைத்து துறைகளுக்கும் ஆதரவு வழங்கி மக்களின் வாழ்வை இதனைவிட மேம்படுத்துவதே தமது அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பு எனவும் நாட்டில் இனவாதத்துக்கு இடமில்லை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இச்செய்தியைப் பகிரவும்

முதன்மை அறிக்கை

  • News First - தமிழ்·16 ஜன., 2026சொந்த இடத்தில் அழகான வாழ்க்கை வீடமைப்பு திட்டம்

சுருக்கம்

05 அமைச்சுக்கள் மற்றும் 09 மாகாண சபைகளினூடாக இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 2026 ஆம் ஆண்டில் சாதகமான முறையில் இந்த வேலைத்திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் டொக்டர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • டொக்டர் எஸ்.எம் சுசில் ரணசிங்க·
  • இராமலிங்கம் சந்திரசேகர்·
  • அனுர குமார திசாநாயக்க·
  • அனுரகுமார திசாநாயக்க·
  • நாகலிங்கம் வேதநாயகன்·
  • ஆனந்த விஜேபால
நிறுவனங்கள்
  • வீடமைப்பு, நிர்மாணிப்பு, நீர் வழங்கல் அமைச்சிற்கு·
  • செயலகங்களின்
இடங்கள்
  • மட்டக்களப்பு மாவட்டத்தில்·
  • முல்லைத்தீவு மாவட்டத்தின்·
  • கிளிநொச்சி மாவட்டத்தில்·
  • திருகோணமலை மாவட்டத்தில்·
  • யாழ்ப்பாண மாவட்டத்தில்·
  • மன்னார் மாவட்டத்தில்·
  • வவுனியா மாவட்டத்தின்·
  • கிழக்கு மாகாணங்கள்

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
1
கட்டுரைகள்
1
முதல் அறிக்கை
16 ஜன., 5:55 PM

வணிகம் இல் மேலும்

வணிகம்
  • அமெரிக்கக் குழந்தைகளுக்கு எலான் மஸ்க்கிடமிருந்து 18 பில்லியன் டொலர் பரிசு – ஒவ்வொருவருக்கும் இலவசமாக இரண்டு SpaceX பங்குகள்!Hiru News - Tamil·3 மணி முன்
  • இன்று மற்றும் நாளை TIN, PIN பெறலாம்!Asian Mirror·5 மணி முன்
  • வீடுகள் மற்றும் சொத்துக் கடன் உச்சவரம்பு 50 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பு!Asian Mirror·5 மணி முன்
  • பண்டிகை கால கோழி இறைச்சி விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்!IBC Tamil·6 மணி முன்
  • கடற்றொழில் அமைச்சுக்கு வரலாற்றில் அதிகூடிய நிதி ஒதுக்கீடு!அத தெரண·11 மணி முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1தென்கொரியாவில் கோர விபத்து : இரு இலங்கையர் உயிரிழப்பு3 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்