1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்கில் இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு
ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) கிரிக்கெட் தொடருக்கான அணிப் பட்டியல்களில் நான்கு இலங்கை வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
சுருக்கம்
இதன்படி, இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க, பிளாட்டினம் பிரிவில் பக்தியா அணிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சகலதுறை ஆட்டக்காரர் கமிந்து மெண்டிஸ், கோல்ட் பிரிவில் நங்கர்ஹார் கொஸ்மிக் அணியிலும், அனுபவமிக்க விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா, கோல்ட் பிரிவில் கந்தஹார் வொரியர்ஸ் அணியிலும் இடம்பிடித்துள்ளனர்.
