1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
மனித குணத்தை மேன்மையுற செய்யும் ஞானகுரு!
அ வதார புருஷரும், அற்புதங்களையும் அருளையும் அள்ளி வழங்குகின்ற கருணாமூர்த்தியுமான சீரடி சாயிபாபாவின் மறு அவதாரமாகப் போற்றப்படும் பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபாவின் 100 ஆவது திருஅவதார தினம் இன்று உலகெங்குமுள்ள சாயி பக்தர்களால் கொண்டாடப்படுகின்றது.
முதன்மை அறிக்கை
சுருக்கம்
அவர் சிறந்த மருத்துவர், சிறந்த கல்விமான், ஒப்பற்ற சேவையாளர், சஞ்சலம் தீர்க்க வந்த சற்குரு, கருணைக்கடல் என அவரது அற்புதங்களையும் அவரிடம் பெற்ற அனுபவங்களையும் ஆயிரக்கணக்கான நூல்கள் விளக்குகின்றன. பகவானால் உருவாக்கப்பட்ட கல்வித்திட்டம், ஜாதி, மதம், மொழி எல்லாவற்றையும் கடந்து அமைதி, உண்மை, தூய்மை, சத்தியம், நீதி, அன்பு, கருணை, அகிம்சை, பொறுமை என்பனவற்றை உலகில் தழைக்கச் செய்யும் சிறந்த ஆன்மீகக் கல்வித்திட்டமாக மலர்ந்தது.