2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
தெற்காசிய விளையாட்டுப் போட்டி காலவரையின்றி மீண்டும் ஒத்திவைப்பு
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டி ஆறாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுருக்கம்
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஒத்திவைப்பு தொடர்பில் பாகிஸ்தான் ஒலிம்பிக் குழு, தெற்காசிய நாடுகளுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழா, அடுத்த ஆண்டு ஏப்ரல் 3ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை பாகிஸ்தானில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
