3 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
சுற்றுலா வருமானம் கிராமிய சிறு தொழில் முயற்சியாளர்கள் வரை சென்றடையும் சூழல் நட்புடைய சுற்றுலாத் துறையை உருவாக்குவதே எமது நோக்கம்
சூழலுக்கும் கலாசாரத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், உள்ளூர் சமூகங்களை வலுவூட்டும் சூழல் நட்புடைய சுற்றுலா அணுகுமுறையை ஊக்குவித்து, சுற்றுலா வருமானம் கிராமிய சிறு தொழில் முயற்சியாளர்கள் வரை நியாயமான முறையில் சென்றடைவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மேல் மாகாண நிகழ்வில் கலந்துகொண்டபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
முழு செய்தித் தொகுப்பு
சுருக்கம்
Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism என்ற தொனிப்பொருளில் இன்று (27) மேல் மாகாண சபை மண்டபத்தில் நடைபெற்ற 2026 உலக சுற்றுலா தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

