1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
யாழில் இராணுவ கட்டுப்பாட்டு காணிகளுக்கு விலை மதிப்பீட்டு...! அம்பலமான தகவல்
வலி வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள தனியார் காணிகளுக்குள் விலைமதிப்பீட்டு அதிகாரிகள் நேற்று புதன்கிழமை சென்றிருப்பது, மக்களின் காணிகளை சுவீகரிக்க திட்டமிடப்படுகிறதா என வலி வடக்கு நில விடுவிப்பு போராட்ட குழுக்கள் சந்தேகம் வெளியிட்டன.
சுருக்கம்
வலி சுமார் 2500 ஏக்கருக்கு மேற்பட்ட தனியார் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் பாதுகாப்பு படைகளிடம் உள்ள நிலையில் அண்மையில் இரண்டு ஏக்கருக்கு குறைவான காணியை மட்டும் விடுவித்தார்கள். இந்நிலையில் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் இருக்கின்ற தனியார் காணிகளை விலை மதிப்பீட்டு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்ட மை எங்களின் காணிகளை இராணுவம் சுவீகரிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையா என்ற சந்தேகம் எழுகிறது.
