1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு: நவம்பர் 15 முதல் மூன்று தினங்களுக்கு மழைவீழ்ச்சி
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் வளிமண்டலக் குழப்ப நிலை ஒன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
சுருக்கம்
எவ்வாறாயினும், இந்த வானிலைத் தொகுதியின் தாக்கத்தால் எதிர்வரும் நவம்பர் 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் நாட்டின் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
