கடலில் சுற்றித் திரியும் எமது மக்களின் எதிர்காலத்திற்காக, நம்பிக்கை எனும் பாய்மரத்தை உயர்த்த கரையில் இருந்து வழங்கப்பட்ட கருணைமிகு நங்கூரம்...
பெருங்கடலில் ஆயிரம் சவால்களுக்கு மத்தியில் வாழ்க்கையைத் தேடும் எமது மீனவ சமூகத்தின் அன்றாட நிர்வாக மற்றும் சேவைச் சிக்கல்களுக்குக் கரையிலேயே விரைவான தீர்வுகளை வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட 'கடற்றொழில் சேவையின் பலம்' நடமாடும் சேவையின் காலி மாவட்ட நிகழ்ச்சி திட்டம் அண்மையில் (16) தொடந்துவ மீன்பிடித் துறைமுக வளாகத்தில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
