வௌ்ளத்தில் சிக்கிய பஸ்ஸிலிருந்தவர்கள் மீட்பு
கலாஓயா - இராஜாங்கனை பகுதியில் வௌ்ளத்தில் சிக்குண்ட பஸ்ஸில் இருந்த 69 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக்க சம்பத் தெரிவித்தார்.நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட விசேட மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.கடற்படையின் படகுகளின் ஊடாக இவர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் கூறினார்.மீட்கப்பட்டவர்கள் தற்போது நொச்சியாகம வைத்தியசாலைக்கு ஆரம்ப சிகிச்சைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.மீட்கப்பட்டவர்களில் ஜேர்மனி பிரஜை மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதியும் அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.அனுராதபுரத்திலிருந்து பயணிகளை ஏற்றி கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பஸ் நேற்று நண்பகல் கலாஓயா பாலத்திற்கு அருகில் சிக்குண்டது.இதன்பின்னர் கடற்படையினரால் அவர்கள் அருகிலிருந்த கட்டடமொன்றுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.மீட்பு பணிகளை பாதுகாப்பு அமைச்சிலிருந்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேரடியாக கண்காணித்திருந்தார்.
