මූලාශ්රයක්
PSL விதியை மீறிய தசுன் ஷானகவிற்கு ஓராண்டுத் தடை
பாகிஸ்தான் சுப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடரில் விளையாடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த விதிகளை மீறிய காரணத்திற்காக, இலங்கை அணியின் சகலதுறை வீரர் தசுன் ஷானகவிற்கு ஓராண்டு தடை விதிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
