"இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் சூழ்நிலைகளிலும் கல்வியைத் தடையின்றித் தொடர்வதற்கான திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்” -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
நாட்டின் கல்வி தொடர்பான தீர்மானங்களை எடுக்கும்போது, சிறுவர்களே எமது முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும் எனவும், இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட நாடு எதிர்கொள்ளக்கூடிய எந்தவொரு நெருக்கடி நிலைமையிலும் கல்வியை எவ்விதத் தடையுமின்றித் தொடர்வதற்குத் தேவையான திட்டங்கள் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
