ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை; வடக்கு மாகாணத்துக்கு அடுத்த ஆண்டும் கூடுதல் நிதி ஒதுக்கீடு” – அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன!
வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு தேவையான ஆளணி மற்றும் நிதி வளங்களை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்தும். குறிப்பாக, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணப்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, யாழ்ப்பாண மாவட்டத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வரும் உத்தியோகத்தர்களை குறுகிய காலத்துக்கு குறித்த மாவட்டங்களுக்கு இணைத்து சேவையாற்றச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அத்துடன், வடக்கு மாகாணத்துக்கு அடுத்த ஆண்டும் இவ்வாண்டைவிட கூடுதலான நிதி ஒதுக்கப்படும் என பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்தார்.
