මූලාශ්රයක්
'நெக்ஸ்ட் ஸ்ரீலங்கா (Next Sri Lanka)' திட்டத்தின் கீழ் ஹோட்டல் துறையில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள்
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் செயல்படும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம், அஸ்வெசும பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இலவச தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பை வழங்கும் நோக்குடன், 2029 ஆம் ஆண்டிற்குள் 12 இலட்சம் அஸ்வெசும பயனாளிக் குடும்பங்களுக்கு வலுவூட்டும் வகையில் 'நெக்ஸ்ட் ஸ்ரீலங்கா (Next Sri Lanka)' திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
