මූලාශ්රයක්
சிறைச்சாலைத் திணைக்களத்தில் புதிதாக இணைந்த 265 பேரின் பயிற்சி நிறைவு
சிறைச்சாலைத் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 265 பேரை உள்ளடக்கிய 13ஆவது பயிலுநர் இரண்டாம் தர சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 105ஆவது பயிலுநர் சிறைச்சாலை காவலர்கள் ஆகிய இரு பயிற்சி பாடநெறிகளின் பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகளின் அணிவகுப்பு மற்றும் பயிற்சி நிறைவு விழா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அவர்களின் தலைமையில் அண்மையில் (19) அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை பயிற்சி நிறுவன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
