මූලාශ්රයක්
கருங்கல் மற்றும் சரளைக்கல் போன்ற கனிம வளங்களின் அகழ்வு, போக்குவரத்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்குப் புதிய சுற்றுநிருபம்
கருங்கல், மணல், மண், சரளைக்கல் மற்றும் களிமண் உள்ளிட்ட கனிம வளங்களின் அகழ்வு, போக்குவரத்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டிருப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி கௌரவ அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
