தேசிய QR கொடுப்பனவு முறைமை அறிமுகம்
இலங்கையை நாணயங்கள் மற்றும் தாள்களின் பயன்பாடு குறைந்த பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் நோக்கத்துடன் தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்பு திட்டம் இன்று(06) ஆரம்பமானது.ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இந்நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்பு திட்டமானது 03 உக்திகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 5,000 ரூபா வரையான அனைத்து LankaQR கொடுக்கல் - வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவை கட்டணத்தை முழுமையாக நீக்குவதற்கு நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
