මූලාශ්රයක්
ஜனாதிபதி தலைமையில் வலுசக்தி அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல்
- நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளை பசுமை வலுசக்தி தீவுகளாக மேம்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்வலுசக்தி அமைச்சு தொடர்பில், 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
