මූලාශ්රයක්
அம்பாறை மாவட்டத்தில் யானை-மனித மோதலைக் கட்டுப்படுத்த விரைவான மற்றும் நீடித்த தீர்வுகளுக்கு நடவடிக்கை
அம்பாறை மாவட்டம் முழுவதும் அதிகரித்து வரும் யானை-மனித மோதலுக்கு விரைவான மற்றும் நீடித்த தீர்வுகளை வழங்கும் நோக்கில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட யானை-மனித மோதல் முகாமைத்துவக் குழுவின் விசேட கலந்துரையாடல், சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி அவர்களின் தலைமையில் நேற்று (20) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
