போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துதல் மற்றும் பிணை வழங்குவது தொடர்பான சட்டங்களைத் திருத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இரண்டு சட்டமூலங்களுக்கு துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம்
போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கைகளை முறைப்படுத்துதல், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்குப் பிணை வழங்குவது தொடர்பான ஏற்பாடுகளைத் திருத்துதல் மற்றும் கனாபிஸ் செடியின் சட்டரீதியான வரைவிலக்கணத்தைத் தெளிவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான இரு சட்டமூலங்கள் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் (15) ஆராயப்பட்டு, சட்டமா அதிபரின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.
