சுற்றாடல் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் - பிரதமர்
காவந்திஸ்ஸ யானையின் இழப்பு அரசாங்கத்துக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது காவந்திஸ்ஸ யானைக்கு நேர்ந்த துயரம் மீண்டும் நிகழ இடமளிக்க முடியாது; பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் பலத்த காயமடைந்திருந்த தேசிய பொக்கிஷமான காவந்திஸ்ஸ யானையின் துரதிர்ஷ்டவசமான இழப்புக் குறித்து அரசாங்கம் மிகுந்த அதிர்ச்சியடைவதாகவும், இவ்வாறான சுற்றாடல் குற்றங்களைச் செய்வோருக்கு எதிராகத் தராதரம் பாராது சுற்றாடல் சட்டம் மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
