මූලාශ්ර 2ක්
பதுளை - மஹியங்கனை வீதியில் வீடு மீது லொறி கவிழ்ந்து விபத்து
பதுளை - மஹியங்கனை வீதியில், மடித்தலை பகுதியில் வீடு ஒன்றின் மீது லொறி ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் வீட்டில் இருந்த தந்தையும் அவரது மகனும், அத்துடன் லொறியின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
