பெட்ரோலுக்கு இன்று நள்ளிரவு முதல் QR
இன்று(18) நள்ளிரவு முதல் பெட்ரோல் வாகனங்களுக்கான QR முறைமை மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. பெட்ரோல் வாகனங்களுக்காக ஏற்கனவே நடைமுறையிலிருந்த எரிபொருள் கோட்டா மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ. ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார்.புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் இன்று நள்ளிரவு வரை பெட்ரோல் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தின் போது QR முறைமையை கருத்திற் கொள்ளாமல் இருக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.ஒற்றை மற்றும் இரட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.எனினும், டீசல் வாகனங்களுக்கான QR முறைமை மாற்றமின்றி நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் அனைத்து வாகனங்களுக்கும் QR முறைமையின் கீழான எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படவுள்ளது.
