இலங்கை ஆசிரியர் சேவைக்கு கல்வியியல் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான புதிய சேவைப் பிரமாணக் குறிப்புத் திருத்தம் குறித்து ஆசிரியர்–அதிபர் சங்கங்களுடன் கலந்துரையாடல்
இலங்கை ஆசிரியர் சேவைக்கு கல்வியியல் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், உயர் நீதிமன்றம் மற்றும் அரச சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைவாக கொண்டுவரப்படவுள்ள புதிய சேவைப் பிரமாணக் குறிப்புத் திருத்தம் தொடர்பில் ஆசிரியர்-அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடும் சந்திப்பொன்று, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் உரிய அதிகாரிகளின் தலைமையில் 2026.10.02 அன்று இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
