මූලාශ්රයක්
டிஜிட்டல் இலங்கையை நோக்கிய பயணத்தில் தொழில்நுட்பத்துடன் மனித மற்றும் நிறுவன ரீதியான தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம்
கொழும்பு - இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வெறும் தொழில்நுட்பம் மாத்திரம் போதுமானதல்ல என்பதோடு, அந்தச் சேவைகளை பொதுமக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான பொருத்தமான மனிதவளமும் வலுவான நிறுவனக் கட்டமைப்பும் உருவாக்கப்படுவது அவசியமாகும். இந்த நோக்கத்தை முன்நிறுத்தி, புதிதாக நிறுவப்பட்ட டிஜிட்டல் மாற்றம் குறித்த அபிவிருத்திப் பங்காளர்களின் பணிக்குழுவின் (Development Partner Working Group on Digital Transformation) அங்குரார்ப்பணக் கலந்துரையாடல் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
