මූලාශ්රයක්
ஆபத்தில் சிக்கியுள்ள காட்டு யானைகளைப் பாதுகாக்கவும் மீட்கவும் வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு ஆதரவாக முப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளன
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆபத்தில் சிக்கியுள்ள காட்டு யானைகள் மற்றும் குட்டி யானைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, சுற்றாடல் அமைச்சினால் விடுக்கப்பட்ட விசேட வேண்டுகோளுக்கு இணங்க, பாதுகாப்பு பிரதி அமைச்சரின் நேரடி வழிகாட்டலின் கீழ், முப்படைகள் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாக குறித்த பகுதிகளுக்குச் சென்று கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் விசேட நடவடிக்கைகள் இன்று (22) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
