මූලාශ්රයක්
இலங்கை விமானப்படைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சிவில் பணியாளர்களுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் நியமனக் கடிதங்கள் கையளிப்பு
இலங்கை விமானப்படைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சிவில் பணியாளர்களுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் நியமனக் கடிதங்களை வழங்கினார் இலங்கை விமானப்படைக்கு (SLAF) புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சிவில் பணியாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு (செப்டம்பர் 02) இலங்கை விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டார்.
