මූලාශ්රයක්
வெளிநாட்டு வேலைவாய்ப்பால் குடும்பங்கள் பாதிக்கப்படாத வகையில் குறித்த துறைகளில் பணிபுரியும் உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைந்த சேவைக்காக அரசாங்க அதிபர் வழங்கிய அறிவுறுத்தல்கள்
வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (21) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது.
