මූලාශ්රයක්
கிளிநொச்சி மாவட்டத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் பல்வேறு சவால்கள் – மேலதிக அரச அதிபர் சுட்டிக்காட்டு
கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட காணிகளை விடுவிப்பதில் நிலவும் தாமதங்கள் காரணமாக, பொதுமக்களின் குடியிருப்பு, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் பல்வேறு சவால்கள் எதிர்கொள்ளப்படுவதாக மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
