அதிவேக வீதி பயணத்தில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்
ஆசனப்பட்டி அணிவது தொடர்பான சட்டத்தை மீறி போக்குவரத்தில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் 10,600 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அனைத்து வௌியேறும் மற்றும் நுழைவு முனையங்களிலும் பயணிக்கும் அனைத்து வாகனங்களில் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக அதிவேக வீதி போக்குவரத்து பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மயூர பெரேரா தெரிவித்தார். அதிவேக வீதிகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் பின் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கும் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் சோதனைகளை முன்னெடுக்குமாறு அதிவேக வீதிகளில் கடமைகளில் உள்ள பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மயூர பெரேரா தெரிவித்தார்.
