මූලාශ්රයක්
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கப்பட்டன
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் ஏற்பாட்டிலும், நோர்த் சீ லிமிடெட் (North sea Ltd.) நிறுவனத்தின் அனுசரணையிலும், சேதமடைந்த மீன்பிடி உபகரணங்களுக்கு மாற்றீடாக புதிய வலைகள் மற்றும் படகுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (14.07.2026) முற்பகல் 11.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள வளாகத்தில் நடைபெற்றது.
