මූලාශ්රයක්
யுக்ரைன் போர் குறித்து இந்திய பிரதமர் கருத்து
யுக்ரைனுடனான போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியா - ரஷ்யாவுக்கு இடையிலான உறவு தனித்துவமானது எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 2 நாடுகளின் நட்புறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். ஷங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டிருந்த போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்த பின்னர் பிரதமர் மோடி இந்த கருத்துக்களை வௌியிட்டுள்ளார்.
-559922.jpg)