முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை கணக்காளர் கைது
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் கணக்காளரும் முகாமைத்துவ உதவியாளர் ஒருவரும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் படுக்கை விரிப்புகளை சுத்தம் செய்வதற்காகப் பெற்றுக்கொள்ளப்பட்ட விலைமனு தொடர்பில் மார்ச் மாதத்திற்கு செலுத்த வேண்டிய பணத்திற்கான காசோலையை விடுவிப்பதற்கு 30,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய ஆணைக்குழுவின் அதிகாரிகள் வைத்தியசாலையின் கணக்காளர் பிரிவில் சந்தேகநபர்களை கைது செய்ததாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
