சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் - எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு
நாளை(25.08.2026) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள 'சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்துக்கு' (International Day of the Victims of Enforced Disappearances) அனைவரதும் ஆதரவைக் கோரியுள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான உதவிகளைத் துரிதப்படுத்துவதுடன் விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
