உலகிலிருந்து தொழில்நுட்பத்தை கொண்டுவருவதற்குப் பதிலாக, உலகிற்கே தொழில்நுட்பத்தைப் பகிர்ந்தளிக்கும் புத்தாக்க நாடாக இலங்கையை மாற்ற வேண்டும் -பிரதமர்
உலகிலிருந்து தொழில்நுட்பத்தை கொண்டுவருவதற்குப் பதிலாக, உலகிற்கே தொழில்நுட்பத்தைப் பகிர்ந்தளிக்கும் புத்தாக்க நாடாக இலங்கையை மாற்ற வேண்டும் - தேசிய விஞ்ஞான மன்றத்தின் 2026 விஞ்ஞானத்தைப் பிரபலப்படுத்தலுக்கான விருது வழங்கும் விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு - உலகிலிருந்து தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டுவந்து அவற்றைப் பயன்படுத்தும் நாடொன்றாக இருப்பதற்குப் பதிலாக, உலகிற்கே புதிய தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் புத்தாக்க நாடாக இலங்கையை மாற்றுவது அரசாங்கத்தின் முக்கிய இலக்காகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
