உள்ளூர் ஊடகங்களை விழித்தெழச் செய்யும் பணியில் 357 இளைஞர்கள் முன்னணியில்.....
நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், எண்ணிம ஊடகத் திறன்களை வளர்ப்பதற்கான ஒரு தேசியத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களமும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து, நாடு முழுவதும் உள்ள 357 இளைஞர்களை உள்ளடக்கிய ஒரு புதுமையான இலத்திரனியல் ஊடகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
