‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
பாராளுமன்றத்தில் நேற்று (12) உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக இலங்கை பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவசர நடவடிக்கை எடுப்பதற்காக உடனே "ஜனாதிபதி செயலணி" ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.