මූලාශ්රයක්
சீனக்குடா வாகன விபத்தில் ஒருவர் பலி
திருகோணமலை - சீனக்குடா பகுதியில் நேற்றிரவு(17) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் மூதூர், நெய்தல் நகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
