உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
எரிபொருள் & பங்குகள்CPC எரிபொருள் விலைகள்; CSE விரைவில்
  • எரிபொருள் விலைகள்
  • கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்வானிலைகிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (14 available)

Asian Mirror
Citizen News
Fact Crescendo தமிழ்
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka News Web தமிழ்
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. உள்ளூர்

1 ஊடகம்·30 செப்., 2026 புதுப்பிக்கப்பட்டது

லலித், குகன் வழக்கில் கோட்டாபய ராஜபக்ஸ சாட்சி

லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்ற வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(29) சாட்சியமளித்தார். நிகழ்நிலை ஊடாக சாட்சி விசாரணை நடைபெற்றது. 2011 டிசம்பர் 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பாக உறவினர்கள் தாக்கல் செய்த வழக்கிற்கமைய இந்த சாட்சி விசாரணை நடைபெற்றது. 2011 டிசம்பர் 09ஆம் திகதி யாழ்ப்பாணம் - ஆவரங்கால் பகுதியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமல் போனவர்களின் குடும்ப உறவினர்களுக்காக ஊடக சந்திப்பை நடத்தத் தயாராக இருந்தபோது, வெள்ளை வேனில் வந்த குழுவினர் லலித் மற்றும் குகனை கடத்திச் சென்றிருந்தனர். இவர்கள் காணாமலாக்கப்பட்டமை குறித்து அப்போதைய அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடக சந்திப்பொன்றில் கருத்து வௌியிட்ட போது, அவர்கள் உயிருடன் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த கூற்றை அடிப்படையாகக் கொண்ட விசாரணைகளின் போது அவரிடம் விபரங்கள் கோரப்பட்ட போது, அன்றைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் அறிவித்தலுக்கு அமையவே அந்த கூற்றை வெளியிட்டதாக ரம்புக்வெல்ல கூறியிருந்தார். இதற்கமைய, 2019 மார்ச் மாதம் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. எனினும், பாதுகாப்பு பிரச்சினைகளை காரணம் காட்டி சாட்சியமளிப்பதை தொடர்ச்சியாக தவிர்த்து வந்த கோட்டாபய ராஜபக்ஸ, பின்னர் ஜனாதிபதி பதவிக்கு தெரிவானார். கடந்த பெப்ரவரி மாதம் 06ஆம் திகதி இந்த வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போது, கோட்டாபய ராஜபக்ஸவின் சட்டத்தரணிகள் அவருக்கு நிகழ்நிலை ஊடாக சாட்சியமளிக்க அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரினர். அந்த கோரிக்கைக்கு ஜூன் 02ஆம் திகதி நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன், அதற்கமையவே நேற்று சாட்சி விசாரணை நடைபெற்றது. கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இருந்து கோட்டாபய ராஜபக்ஸ சாட்சியமளித்ததுடன், யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இருந்து முறைப்பாட்டாளர்கள் சார்பில் சட்டத்தரணி நுவன் போப்பகேவின் வழிநடத்தலின் கீழ் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. நீண்ட காலம் கடந்துவிட்டதால் தமக்கு அது தொடர்பான சம்பவங்கள் நினைவில்லை என கோட்டாபய ராஜபக்ஸ சாட்சியமளித்தார். அத்துடன், அரசியல் இலாபத்திற்காகவும் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவே சில தரப்பினர் கடத்தல்கள் மற்றும் காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் இராணுவம் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கு தொடர்பிருப்பதாக குறிப்பிடுவதாகவும் கோட்டாபய ராஜபக்ஸ ​தெரிவித்தார். அதனை தொடர்ந்து, மேல் மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாகர சேனாரத்ன கடத்தப்பட்ட சம்பவம் குறித்து சாட்சியமளித்த கோட்டாபய ராஜபக்ஸ, தனக்கு அது குறித்து நினைவில்லை என கூறினார். மேற்கோள் சட்டத்தரணி நுவன் போப்பகே கீத் நொயார் காணாமல் போனமை உங்களுக்கு நினைவிருக்கிறதா? மேற்கோள் கோட்டாபய ராஜபக்ஸ நீதவான் அவர்களே, நான் அறிந்த வரையில் கீத் நொயார் காணாமல் போகவில்லை. சாட்சியப் பதிவு நிறைவடைந்ததுடன், மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இச்செய்தியைப் பகிரவும்

முதன்மை அறிக்கை

படம்: News First - தமிழ்News First - தமிழ்•30 செப்., 2026லலித், குகன் வழக்கில் கோட்டாபய ராஜபக்ஸ சாட்சி

News 1st எழுதியது

News First - தமிழ் இல் படிக்க

சுருக்கம்

2011 டிசம்பர் 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பாக உறவினர்கள் தாக்கல் செய்த வழக்கிற்கமைய இந்த சாட்சி விசாரணை நடைபெற்றது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

நபர்கள்
  • கெஹெலிய ரம்புக்வெல்ல
  • லலித் குமார் வீரராஜ்
  • லலித்குமார் வீரராஜ்
  • குகன் முருகானந்தன்
  • கோட்டாபய ராஜபக்ஸ
  • சாகர சேனாரத்ன
  • நுவன் போப்பகே
  • கீத் நொயார்
நிறுவனங்கள்
  • கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்
  • யாழ். நீதிவான் நீதிமன்றில்
இடங்கள்
  • வெள்ளை வேனில்
  • ஆவரங்கால்
  • Colombo
  • Jaffna
திறவுச்சொற்கள்
  • சாட்சியமளித்தார்
  • நினைவில்லை
  • வழக்கில்
  • கூற்றை

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
1
கட்டுரைகள்
1
முதல் அறிக்கை
30 செப்., 8:47 AM

உள்ளூர் இல் மேலும்

உள்ளூர்
  • காவன்திஸ்ஸ யானை உயிரிழந்த சம்பவம்: இரு சந்தேகநபர்களுக்கும் நவம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியல்!Hiru News - Tamil·13 நிமி. முன்
  • ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் – சாலிய பீரிஸ் கருத்துAsian Mirror·19 நிமி. முன்
  • தலவாக்கலையில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு!அத தெரண·42 நிமி. முன்
  • வண்ணாத்திவில்லு வெடிபொருட்கள் பதுக்கல் : ‘கபூர் மாமா’வுக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை3 ஊடகங்கள்·49 நிமி. முன்
  • கரூரிலேயே அவனை முடித்திருந்தால்.. - சர்ச்சையான கருத்து வெளியிட்ட தி.மு.க. கவுன்சிலர் கைது!Hiru News - Tamil·56 நிமி. முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1வண்ணாத்திவில்லு வெடிபொருட்கள் பதுக்கல் : ‘கபூர் மாமா’வுக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை3 ஊடகங்கள்
  2. 2நாமலின் பிணை கோரிக்கை மீதான உத்தரவு நவம்பர் 3 க்கு ஒத்திவைப்பு!13 ஊடகங்கள்
  3. 3வங்காள விரிகுடாவை விட்டு வெளியேறும் அர்னாப் புயல்!8 ஊடகங்கள்
  4. 4சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்‌ச3 ஊடகங்கள்
  5. 5முல்லைத்தீவில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் - களமிறங்கும் விமானப்படை உலங்குவானூர்தி6 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி