அறிவிப்பு: LakFeed தமிழ்ப் பதிப்பு 2026 டிசம்பர் 31 முதல் நிறுத்தப்படும்.

எங்களிடம் தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை; தமிழ் ஆசிரியர் ஒருவரை நியமிக்கப் போதிய நிதியும் தற்போது இல்லை.

மேலும் படிக்க / Read in English

LakFeed ஒரு சிறிய சுயாதீனத் திட்டம். இங்கு வெளியாகும் உள்ளடக்கத்தின் தரத்தைச் சரிபார்க்க யாரும் இல்லாமல் இந்தப் பதிப்பைத் தொடர்ந்து நடத்துவது சரியல்ல என்று கருதுகிறோம். அந்தத் தேதிக்குப் பிறகு தமிழ்ப் பக்கங்கள் கிடைக்காது. செய்திகள், நாணய மாற்று விகிதங்கள், தங்க விலை உள்ளிட்ட சேவைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தொடர்ந்து கிடைக்கும். ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும். இதுவரை எங்களுடன் இருந்தமைக்கு நன்றி.

LakFeed's Tamil edition closes on 31 December 2026. LakFeed is a small independent project. Nobody here reads Tamil, and we cannot currently afford to hire a Tamil editor. With no one able to check what appears here, we do not think it is right to keep this edition running. After that date the Tamil pages will no longer be available. News, exchange rates, gold prices and the rest of the site stay available in English and Sinhala. We are sorry for the inconvenience, and thank you for reading.

Englishසිංහල

உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்Colombo share prices, indices and companies
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
சலுகைகருவிகள்
ஆராயுங்கள்
விக்கிசெய்திகளில் வரும் நபர்கள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள்
  • அனைத்துப் பக்கங்கள்
  • நபர்கள்
  • நிறுவனங்கள்
  • இடங்கள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

  • முதல் பக்கம்
  • பிரபலமானவை
  • சமீபத்திய
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்
ஆதாரங்கள்ஆதாரங்கள்

செய்தி ஆதாரங்கள் (14)

Asian MirrorCitizen NewsFact Crescendo தமிழ்Global Tamil NewsHiru News - TamilIBC TamilLanka News Web தமிழ்Lanka TruthNews First - தமிழ்News.lkTamil MirrorThePapare TamilThinakaranஅத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • விக்கி
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. கல்வி

3 ஊடகங்கள்·1 நாள் முன் புதுப்பிக்கப்பட்டது

ஆசிரியர் இடமாற்றக் கொள்கையைத் திருத்துதல் மற்றும் தேசிய, மாகாணப் பாடசாலைகளுக்கு இடையில் ஆசிரியர்களை இடமாற்றுதல்

ஆசிரியர் இடமாற்றக் கொள்கையைத் திருத்துதல் மற்றும் தேசிய, மாகாணப் பாடசாலைகளுக்கு இடையில் ஆசிரியர்களை இடமாற்றுவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது குறித்து பாராளுமன்றக் குழு கவனம் செலுத்தியுள்ளது கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக, ஆசிரியர் இடமாற்றங்கள், பாடசாலைகளின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்தல், முன்பள்ளிக் கல்வி, பாடசாலை மதிய உணவுத் திட்டம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன. குறித்த குழு, கௌரவ பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கும்போது எதிர்கொள்ளப்படும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, ஆசிரியர் இடமாற்றச் சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ள 30 கிலோமீற்றர் தூர வரையறையானது, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் போன்ற மாவட்டங்களிலுள்ள தொலைதூரப் பாடசாலைகள் தொடர்பில் நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்துவதால், அந்த வரையறையை மீளாய்வு செய்யுமாறு இடமாற்றச் சபைக்கு அறிவிக்கக் குழு தீர்மானித்தது. அத்துடன், சில தேசியப் பாடசாலைகளில் 10 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு வேறு தேசியப் பாடசாலைகள் இல்லாத காரணத்தினால் இடமாற்றம் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, இடமாற்றங்களுக்காக மாத்திரம் தேசியப் பாடசாலைகளுக்கும் மாகாணப் பாடசாலைகளுக்கும் இடையில் ஆசிரியர்களை இடமாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது. ஆசிரியர்களின் சேவைக் காலம் தொடர்பான தகவல்களைச் சில பாடசாலைகள் சரியாகச் சமர்ப்பிக்காமை மற்றும் ஆசிரியர் தரவுக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இதற்கமைய, உரிய தகவல்களை மறைப்பதாகச் சந்தேகிக்கப்படும் பாடசாலைகளுக்கு நேரடியாகச் சென்று பரிசோதிப்பதுடன், ஆசிரியர் தரவுக் கட்டமைப்பிலுள்ள தகவல்களைப் புதுப்பித்து, சேவைக் காலத்தைச் சரியாகக் கணக்கிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வட மாகாணத்திற்கான ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்குப் பதிலாக, 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் புதிய கொள்கையொன்றைத் தயாரிப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. பாடசாலைகளில் அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தும் பாடசாலைகளிடம் கையளிக்கப்படாத கட்டடங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, குளியாபிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தும் அது பாடசாலையிடம் கையளிக்கப்படாத காரணத்தினால், அதன் ஒலிக் கட்டுப்பாட்டுப் பலகைகள் மற்றும் குளிரூட்டல் கட்டமைப்புகள் சேதமடைந்து வருவதால், இது தொடர்பில் தனியான விசாரணையொன்றை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட மட்டத்தில் பாடசாலை அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. வவுனியா மாவட்டத்தின் செம்பலங்குளம் மற்றும் தாஜனிக்குளம் பாடசாலைகளிலுள்ள விசேட கல்விப் பிரிவுகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக மாகாண நிதி ஒதுக்கீடுகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆரம்பப் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட ஐந்து பாடசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ள 21 திட்டங்களில் 12 திட்டங்களுக்கான மதிப்பீடுகளை அங்கீகரித்து நிதி ஒதுக்கீடுகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருந்தாலும், அது முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதைக் கண்காணிப்பதற்கான முறையான பொறிமுறையொன்று இல்லாமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. முன்பள்ளிக் கல்வி தொடர்பில் மாகாண சபைகளுக்கும் உரிய அமைச்சுக்களுக்கும் இடையில் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் நிர்வாக மற்றும் கண்காணிப்புச் சிக்கல்களைத் தீர்ப்பதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மதிய உணவுத் திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள் முறையாகப் பின்பற்றப்படாமை மற்றும் உணவின் தரம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இதற்கிடையில், பாடசாலைகளில் நிலவும் மனித வளம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட "இலங்கையின் கல்விக் கட்டமைப்பில் நிலவும் மனித வளங்களின் போதிய பயன்பாட்டின்மையை நீக்குவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான நிபுணர் குழு அறிக்கை" கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்னவினால் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பாடசாலைகளின் மனித வளங்கள் தொடர்பில் உபகுழுவினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை, எதிர்கால நடவடிக்கைகளுக்காகப் பரிந்துரைப்பது தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது. குழுக் கூட்டத்தில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கல்வித் துறையுடன் தொடர்புடைய தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இச்செய்தியைப் பகிரவும்

பிற மொழிகளில்

  • සිංහලවැටුප් ගැන කථාකරන්න ගිය ගුරු සංගම් වලට අගමැතිනිය හොඳින් කියා දෙයි

முழு செய்தித் தொகுப்பு

  • அத தெரண·1 நாள் முன்ஆசிரியர் இடமாற்றக் கொள்கையைத் திருத்துவது குறித்து அவதானம்!
  • News.lk·1 நாள் முன்ஆசிரியர் இடமாற்றக் கொள்கையைத் திருத்துதல் மற்றும் தேசிய, மாகாணப் பாடசாலைகளுக்கு இடையில் ஆசிரியர்களை இடமாற்றுதல்
  • IBC Tamil·2 நாள் முன்வட மாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கை : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

சுருக்கம்

ஆசிரியர்களின் சேவைக் காலம் தொடர்பான தகவல்களைச் சில பாடசாலைகள் சரியாகச் சமர்ப்பிக்காமை மற்றும் ஆசிரியர் தரவுக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அத தெரண இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • Harini Amarasuriya
நிறுவனங்கள்
  • கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுசார்·
  • ஆசிரியர் இடமாற்றச் சபையினால்·
  • கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான·
  • Parliament of Sri Lanka·
  • மத்திய மகா வித்தியாலயம்·
  • பாராளுமன்றக்
இடங்கள்
  • ஹம்பாந்தோட்டை·
  • Polonnaruwa·
  • அநுராதபுரம்·
  • குளியாபிட்டிய·
  • Vavuniya·
  • வவுனியா மாவட்டத·
  • செம்பலங்குளம்·
  • தாஜனிக

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
3
கட்டுரைகள்
3
முதல் அறிக்கை
26 நவ., 9:54 AM
சமீபத்திய புதுப்பிப்பு
26 நவ., 6:03 PM

கல்வி இல் மேலும்

கல்வி
  • க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்குத் தடை!2 ஊடகங்கள்·1 மணி முன்
  • டிசம்பர் 04 பாடசாலை விடுமுறை ஆரம்பம்5 ஊடகங்கள்·5 மணி முன்
  • கல்வியமைச்சின் அதிரடி அறிவிப்புTamil Mirror·18 மணி முன்
  • மாற்றத்தை நோக்கிய தேசிய கல்விக்கொள்கையும் சவால்களும்Thinakaran·23 மணி முன்
  • ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல்2 ஊடகங்கள்·1 நாள் முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1தென்கொரியாவில் கோர விபத்து : இரு இலங்கையர் உயிரிழப்பு3 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்