3 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வீட்டு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நான்கு புதிய வீடுகள் பயனாளிகளிடம் இன்று (25) கையளிக்கப்பட்டுள்ளன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான வீடுகளைக் கையளித்தார். ஒவ்வொரு வீடும் தலா பத்து இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளாகும். தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவின் பொற்கேணி, புதுக்குடியிருப்பு, மீரா நகர், முள்ளிப்பொத்தானை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள பயனாளிகளுக்கே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன. இதில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை சபையின் மாவட்ட முகாமையாளர்,பிரதேச சபை உறுப்பினர்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பிரஜா சக்தி தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முழு செய்தித் தொகுப்பு
சுருக்கம்
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்குட்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகள் அற்ற பயனாளிகளுக்கான வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று (24) மாலை இடம்பெற்றுள்ளது. நலன்புரி முகாம்களில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து சிறிய குடிசைகளிலே தமது வாழ்க்கையினை நடாத்தி வந்த மக்களில் வீட்டுத் திட்டத்தைப் பூர்த்தி செய்த மூன்று பேருக்கான வீடுகள் இன்று வீடமைப்பு அமைச்சர் சுனில் ரணசிங்கவினால் கையளிக்கப்பட்டது.

