அறிவிப்பு: LakFeed தமிழ்ப் பதிப்பு 2026 டிசம்பர் 31 முதல் நிறுத்தப்படும்.

எங்களிடம் தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை; தமிழ் ஆசிரியர் ஒருவரை நியமிக்கப் போதிய நிதியும் தற்போது இல்லை.

மேலும் படிக்க / Read in English

LakFeed ஒரு சிறிய சுயாதீனத் திட்டம். இங்கு வெளியாகும் உள்ளடக்கத்தின் தரத்தைச் சரிபார்க்க யாரும் இல்லாமல் இந்தப் பதிப்பைத் தொடர்ந்து நடத்துவது சரியல்ல என்று கருதுகிறோம். அந்தத் தேதிக்குப் பிறகு தமிழ்ப் பக்கங்கள் கிடைக்காது. செய்திகள், நாணய மாற்று விகிதங்கள், தங்க விலை உள்ளிட்ட சேவைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தொடர்ந்து கிடைக்கும். ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும். இதுவரை எங்களுடன் இருந்தமைக்கு நன்றி.

LakFeed's Tamil edition closes on 31 December 2026. LakFeed is a small independent project. Nobody here reads Tamil, and we cannot currently afford to hire a Tamil editor. With no one able to check what appears here, we do not think it is right to keep this edition running. After that date the Tamil pages will no longer be available. News, exchange rates, gold prices and the rest of the site stay available in English and Sinhala. We are sorry for the inconvenience, and thank you for reading.

Englishසිංහල

உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்Colombo share prices, indices and companies
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
சலுகைகருவிகள்
ஆராயுங்கள்
விக்கிசெய்திகளில் வரும் நபர்கள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள்
  • அனைத்துப் பக்கங்கள்
  • நபர்கள்
  • நிறுவனங்கள்
  • இடங்கள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

  • முதல் பக்கம்
  • பிரபலமானவை
  • சமீபத்திய
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்
ஆதாரங்கள்ஆதாரங்கள்

செய்தி ஆதாரங்கள் (14)

Asian MirrorCitizen NewsFact Crescendo தமிழ்Global Tamil NewsHiru News - TamilIBC TamilLanka News Web தமிழ்Lanka TruthNews First - தமிழ்News.lkTamil MirrorThePapare TamilThinakaranஅத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • விக்கி
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. விளையாட்டு

1 ஊடகம்·22 அக்., 2026 புதுப்பிக்கப்பட்டது

சரித்திர வெற்றியீட்டிய இலங்கை

பாகிஸ்தானில் நடைபெறும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய(22) போட்டியில் இலங்கை அணி மகத்தான வெற்றியை ஈட்டி சரித்திரம் படைத்துள்ளது. போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 430 ஓட்டங்கள் இமாலய இலக்கை இலங்கை அணி 49.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு கடந்து மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியது. அண்மைக் காலமாக தோல்விகளால் துவண்டுபோயிருந்த இலங்கை அணிக்கும் இரசிகர்களுக்கும் புத்துணர்ச்சி அளித்த போட்டியாகவும் வெற்றியாகவும் இது அமைந்தது. சமீப காலத்தில் இலங்கை விளையாடிய போட்டிகளில் இரசிகர்களை ஆசனத்தின் நுனிக்கே அமரச் செய்து மிகுந்த எதிர்பார்ப்பையும் அதேவேளை இறுதிவரை விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாகவும் அமைந்ததென்றால் அது மிகையாகாது. ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 429 ஓட்டங்களைக் குவித்தது. அணித்தலைவர் ஹெரி புரூக் 116 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 21 பௌண்டரிகளுடன் 202 ஓட்டங்களை விளாசினார். இது சர்வதேச ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஒருவர் இரட்டை சதமடித்த முதல் சந்தர்ப்பமாகும். இறுதிவரை ஆட்டமிழக்காத வில் ஜெக்ஸ் 66(30) ஓட்டங்களையும் ஜோ ரூட் 69(66) ஓட்டங்களையும் டொம் பென்டன் 50 ஓட்டங்களையும் பெற்றனர். இதன்போது ஹெரி புரூக் - வில் ஜெக்ஸ் ஜோடி 79 பந்துகளில் 185 ஓட்டங்களைப் பகிர்ந்தது. மாபெரும் இலக்கான 430 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 4.2 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு முதலிரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் வழமை போன்று இலங்கை தோல்விடைந்துவிடும் என்ற எண்ணம் இரசிகர்களுக்கு ஏற்பட்டாலும் அதனை பொய்யாக்கும் வகையில் அவிஷ்க பெர்னாண்டோவும் பவன் ரத்நாயக்கவும் அபாரமாக விளையாடினர். இவர்கள் 3ஆம் விக்கெட்டுக்காக 166 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். 83 பந்துகளை எதிர்கொண்ட அவிஷ்க பெர்னாண்டோ 2 சிக்ஸர்கள், 11 பெண்டரிகளுடன் 97 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய பவன் ரத்நாயக்க 106 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 15 பௌண்டரிகளுடன் 130 ஓட்டங்களை குவித்தார். அதிரடி காட்டிய தசுன் ஷானக 50 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 6 பௌண்டரிகளுடன் 97 ஓட்டங்களை விளாசினார். இலங்கை அணி ஒரு கட்டத்தில் 47 ஓவர்களில் 406 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்வரிசை வீரர்களான ஷஹன் ஆரச்சிகே, துனித் வெல்லாலகே, ஹேஷான் மலிங்க ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி 49.3 ஓவர்களில் 423 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து கடும் நெருடிக்கடிக்குள்ளானது. எனினும், களத்தில் தனி ஒருவராக நின்று நம்பிக்கையுடன் போராடிய ஜனித் லியனகே இறுதி ஓவரின் 5 ஆவது பந்தில் சிக்ஸரை விளாசி இலங்கைக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். 27 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்ஸர்கள், 7 பௌண்டரிகளுடன் 61 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். இது சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் இலங்கை அணி அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை பதிலளித்தாடிக் கடந்த முதல் வெற்றியாகவும் பதிவானது.

இச்செய்தியைப் பகிரவும்

முதன்மை அறிக்கை

  • News First - தமிழ்·22 அக்., 2026சரித்திர வெற்றியீட்டிய இலங்கை

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • அவிஷ்க பெர்னாண்டோ·
  • துனித் வெல்லாலகே·
  • பவன் ரத்நாயக்க·
  • ஷஹன் ஆரச்சிகே·
  • ஹேஷான் மலிங்க·
  • ஜனித் லியனகே·
  • டொம் பென்டன்·
  • ர்னாண்டோவும்
இடங்கள்
  • இலங்கை பாகிஸ்தானில்·
  • ராவல்பிண்டியில்·
  • United Kingdom·
  • Sri Lanka·
  • Pakistan

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
1
கட்டுரைகள்
1
முதல் அறிக்கை
22 அக்., 10:42 PM

விளையாட்டு இல் மேலும்

விளையாட்டு
  • முன்னாள் தலைவர்களின் வரிசையில் குசல் மெண்டிஸ் - கிடைத்தது அரிய கௌரவம்!Hiru News - Tamil·45 நிமி. முன்
  • மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக மீண்டும் ரோஹித் சர்மா3 ஊடகங்கள்·2 மணி முன்
  • 18ஆவது ஆண்டாக சிறார்களின் Golf விளையாட்டிற்கு ப்ரிமா அனுசரணைThePapare Tamil·20 மணி முன்
  • 4 இலட்சம் விருந்தினர்களுடன் பிரம்மாண்டத் திருமணம்Tamil Mirror·20 மணி முன்
  • சென்னையில் இடம்பெறவுள்ள பிக்பாஷ் லீக்!அத தெரண·22 மணி முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1தென்கொரியாவில் கோர விபத்து : இரு இலங்கையர் உயிரிழப்பு3 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்