பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று நிதிச் சட்டமூலங்களை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்
பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமாவய (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்களை கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (04) சான்றுரைப்படுத்தினார்.
