உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
எரிபொருள் & பங்குகள்CPC எரிபொருள் விலைகள்; CSE விரைவில்
  • எரிபொருள் விலைகள்
  • கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. உள்ளூர்

1 ஊடகம்·1 நாள் முன் புதுப்பிக்கப்பட்டது

தலல்ல கடற்கரையில் 475kg போதைப்பொருள் மீட்பு

மாத்தறை - தலல்ல, நாஓட்டுன்ன கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் எடை 475 கிலோகிராமிற்கும் அதிகமானது என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்த போதைப்பொருட்களின் பெறுமதி 450 கோடி ரூபாவிற்கும் அதிகமாகும். கடற்படையினரும் கரையோர பாதுகாப்பு திணைக்களமும் இணைந்து குறித்த கடற்பரப்பில் இன்று (24) முன்னெடுத்த கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, 10 உரப்பைகள் மற்றும் 11 பயணப் பொதிகளுடன், போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரின் விசேட நிபுணத்துவ ஒத்துழை்ப்புடன் குறித்த போதைப்பொருள் தொகை மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, 200 பொதிகளில் அடைக்கப்பட்ட 200 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும், 275 பொதிகளில் அடைக்கப்பட்ட 275 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையை பார்வையிடுவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர உள்ளிட்ட குழுவினர் இன்று (24) பிற்பகல் அங்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, கரையோரப் பாதுகாப்புப் படையினரும், இலங்கை கடற்படையினரும் கடலில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பெருமளவில் தீவிரப்படுத்தியுள்ளதன் விளைவாகவே, சமூகத்தில் கலக்கவிருந்த பாரிய அளவிலான போதைப்பொருட்கள் தடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கடந்த காலங்களில் உருவாக்கப்பட்டிருந்த அரசியல் கலாசாரம் மற்றும் அரசியல் ஆசீர்வாதத்தின் ஊடாகவே போதைப்பொருள் கடத்தல்காரர்கள் செயற்பட்டதாகவும், தற்போதைய அரசாங்கம் இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், நாட்டில் 48 திட்டமிட்ட குற்றக் குழுக்கள் செயற்பாட்டில் உள்ளதாகவும், மேலும் 48 குழுக்கள் செயலற்ற நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இவற்றில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். நாட்டின் பிள்ளைகளை பலிகொடுத்துவிட்டு இனியும் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும், இந்த கடத்தல்காரர்களுக்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்துவதை அரசாங்கம் தமது பொறுப்பாகக் கருதுவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

இச்செய்தியைப் பகிரவும்

முதன்மை அறிக்கை

படம்: News First - தமிழ்News First - தமிழ்•1 நாள் முன்தலல்ல கடற்கரையில் 475kg போதைப்பொருள் மீட்பு

News 1st எழுதியது

News First - தமிழ் இல் படிக்க

சுருக்கம்

கடற்படையினரும் கரையோர பாதுகாப்பு திணைக்களமும் இணைந்து குறித்த கடற்பரப்பில் இன்று (24) முன்னெடுத்த கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, 10 உரப்பைகள் மற்றும் 11 பயணப் பொதிகளுடன், போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

நபர்கள்
  • மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர
  • ஆனந்த விஜேபால
நிறுவனங்கள்
  • பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரின்
  • கரையோரப் பாதுகாப்புப் படையினரும்
  • கரையோர பாதுகாப்பு திணைக்களமும்
  • இலங்கை கடற்படையினரும்
இடங்கள்
  • நாஓட்டுன்ன கடற்பரப்பில்
  • தலல்ல கடற்கரையில்
  • Sri Lanka
  • Matara
  • தலல்ல
திறவுச்சொற்கள்
  • போதைப்பொருட்களின்
  • கிலோகிராமிற்கும்
  • போதைப்பொருளும்
  • மீட்பு

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
1
கட்டுரைகள்
1
முதல் அறிக்கை
24 அக்., 7:28 PM

உள்ளூர் இல் மேலும்

உள்ளூர்
  • ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!அத தெரண·1 மணி முன்
  • அஹங்கமயில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்:ஐவர் வைத்தியசாலையில்3 ஊடகங்கள்·1 மணி முன்
  • களுத்துறை இரட்டை கொலை: பதுளையைச் சேர்ந்த பிரதான துப்பாக்கிதாரி கைது!அத தெரண·3 மணி முன்
  • ஆபத்தான முறையில் பயணித்த முச்சக்கர வண்டி மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு3 ஊடகங்கள்·4 மணி முன்
  • துப்பில்லாத ஹீரோவாக மாறிய துப்பாக்கி ஹீரோ: முதலமைச்சர் விஜயை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!Hiru News - Tamil·4 மணி முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 10 ஊடகங்கள்
  2. 2பேருந்தும் – டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்து: ஐவர் மருத்துவமனையில் அனுமதி!3 ஊடகங்கள்
  3. 3நுரைச்சோலை மின்நிலையத்தின் 2ஆவது இயந்திரம் இடைநிறுத்தம்3 ஊடகங்கள்
  4. 4சினோபெக், ஆர்.எம். பார்க் நிறுவனங்களின் ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலை அதிகரிப்பு! 7 ஊடகங்கள்
  5. 5ஆபத்தான முறையில் பயணித்த முச்சக்கர வண்டி மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு3 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி