1 sourceUpdated
தலல்ல கடற்கரையில் 475kg போதைப்பொருள் மீட்பு
மாத்தறை - தலல்ல, நாஓட்டுன்ன கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் எடை 475 கிலோகிராமிற்கும் அதிகமானது என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்த போதைப்பொருட்களின் பெறுமதி 450 கோடி ரூபாவிற்கும் அதிகமாகும். கடற்படையினரும் கரையோர பாதுகாப்பு திணைக்களமும் இணைந்து குறித்த கடற்பரப்பில் இன்று (24) முன்னெடுத்த கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, 10 உரப்பைகள் மற்றும் 11 பயணப் பொதிகளுடன், போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரின் விசேட நிபுணத்துவ ஒத்துழை்ப்புடன் குறித்த போதைப்பொருள் தொகை மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, 200 பொதிகளில் அடைக்கப்பட்ட 200 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும், 275 பொதிகளில் அடைக்கப்பட்ட 275 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையை பார்வையிடுவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர உள்ளிட்ட குழுவினர் இன்று (24) பிற்பகல் அங்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, கரையோரப் பாதுகாப்புப் படையினரும், இலங்கை கடற்படையினரும் கடலில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பெருமளவில் தீவிரப்படுத்தியுள்ளதன் விளைவாகவே, சமூகத்தில் கலக்கவிருந்த பாரிய அளவிலான போதைப்பொருட்கள் தடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கடந்த காலங்களில் உருவாக்கப்பட்டிருந்த அரசியல் கலாசாரம் மற்றும் அரசியல் ஆசீர்வாதத்தின் ஊடாகவே போதைப்பொருள் கடத்தல்காரர்கள் செயற்பட்டதாகவும், தற்போதைய அரசாங்கம் இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், நாட்டில் 48 திட்டமிட்ட குற்றக் குழுக்கள் செயற்பாட்டில் உள்ளதாகவும், மேலும் 48 குழுக்கள் செயலற்ற நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இவற்றில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். நாட்டின் பிள்ளைகளை பலிகொடுத்துவிட்டு இனியும் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும், இந்த கடத்தல்காரர்களுக்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்துவதை அரசாங்கம் தமது பொறுப்பாகக் கருதுவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.
Summary
கடற்படையினரும் கரையோர பாதுகாப்பு திணைக்களமும் இணைந்து குறித்த கடற்பரப்பில் இன்று (24) முன்னெடுத்த கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, 10 உரப்பைகள் மற்றும் 11 பயணப் பொதிகளுடன், போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
-561234.jpg&w=640&q=75)