"அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தை நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தை உயரிய தொழில்நுட்பம் மற்றும் நவீன பாதுகாப்பு அச்சக ஆற்றல்களுடன் பலப்படுத்துவதற்கும், 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான இயந்திரங்களைப் படிப்படியாக அகற்றி, புதிய உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
